
ராய் லட்சுமியின் கவர்ச்சி இமேஜை சிண்ட்ரெல்லா மாற்றும்: இயக்குனர் நம்பிக்கை
வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கான வழக்கமான பாணியில் இருந்து விலகி ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது . ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும். அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மாற்றம் கொண்டதாக இருக்கும். நல்ல நடிப்பில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக இருக்கும் . என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!