
மனைவிக்காக படம் தயாரிக்கும் ஆர்யா
அதேபோல் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சாயிஷாவிற்கும் கதையின் நாயகியாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள சாயிஷா, தற்போது டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருப்பவர், தெலுங்கு-, கன்னடத்தில் தயாராகி வரும் யுவரத்னா என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது சாயிஷாவுக்கும் ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவைப் போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்கும் முடிவில் உள்ளார். இதற்காக சில இளவட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார் ஆர்யா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!