
சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதியில் மாற்றம் ?
ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், மார்ச் 26ம் தேதிகளில் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது குறைவாகவே இருக்கும். அதோடு, அடுத்தடுத்து "சுல்தான், கர்ணன்" ஆகிய படங்கள் வெளிவர உள்ளதால் அந்தப் படங்களுக்காக தியேட்டர்களை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
எனவே, மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வந்தால் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என யோசித்துள்ளார்களாம். ஆனால், அப்போது பிளஸ் டூ மாணவர்களுக்குத் தேர்வுகள் நடக்கும் நேரம். அனைத்தையும் கருத்தில் கொண்டு விரைவில் புதிய தேதியை அறிவிக்கலாம் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!