
மாலத்தீவில் ஓய்வெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்த கொரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் ஆரம்பமானதும் பல நடிகைகள் சுற்றுலா சென்ற ஒரே நாடு மாலத் தீவு. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் நடிகைகள் என பலரும் தொடர்ந்து கணவர், காதலர், குடும்பத்தினருடன் அங்கு சுற்றுலா சென்றனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் தன்னுடைய சுற்றுலா குறித்து அடிக்கடி விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். தொடர்ச்சியான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பது நடிகர், நடிகைகளுக்கு ஒரு புத்துணர்வைத் தரும். பெரும்பாலான மாலத்தீவு சுற்றுலாக்கள் ஸ்பான்சர் செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள். அதனால்தான், பலரும் அடிக்கடி அங்கு செல்கிறார்களாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!