
அப்பா கமல்ஹாசனிடம் காதலனை அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன்?
தற்போது சாந்தனு ஹசரிகா என்ற டூடுள் கலைஞர் மற்றும் ஓவியரைக் காதலித்து வருவதாகச் சொல்கிறார்கள். சாந்தனு அவருடைய சமூக வலைத்தளத்தில் ஸ்ருதியுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனால், இருவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த ஸ்ருதிஹாசன், தன் அப்பா கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த "கிராக்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழில் "லாபம்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!