
கார் வாஷிங் டூ கார் ஓனர், புகழ் மகிழ்ச்சி
தற்போது சொந்தமாக ஒரு புதிய காரை வாங்கியிருக்கிறார். தான் கார் வாங்கியது பற்றி ரசிகர்களுக்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையே யு டியுபில் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது ரசிகர்கள்தான். எங்களது பரம்பரையிலேயே முதல் கார் வாங்கியது நான்தான். நான் கார் வாங்கியது குறித்து எனது அம்மாவுக்கு சொன்னேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு காலத்தில் காரைக் கழுவி, 10 ரூபாய் டிப்ஸ் வாங்கியவன் நான். இன்று நானே சொந்தமாக ஒரு காரை வாங்கி உள்ளேன். என்னுடைய ஆசை, எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும், அதைச் செய்வேன்,” எனக் கூறியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் கார் வாங்கிய புகழுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!