
ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள் : வைரலாகும் சரவணன் புகைப்படங்கள்.
அவர் கதாநாயகனாக நடித்து வரும் புதி படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம். ஒரு ஆக்ஷன் காட்சியில் வில்லன் நடிகர் பெசன்ட் நகர் ரவியை அவர் அடித்து வீழ்த்திய காட்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம், இந்த ஆண்டு நிச்சயம் வெளிவந்துவிடும். ஜேடி ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கீத்திகா திவாரி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
பல கோடி ரூபாய் செலவில் இப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறதாம். ஏற்கெனவே, பாடல் காட்சிகளுக்கே சில பல கோடி செலவு செய்து படமாக்கியதாகத் தகவல் வெளியானது. முன்னணி நடிகர்களின் படங்களைப் போலவே இப்படம் பிரம்மாண்டமாய் இருக்கும் எனப் படக்குழுவில் தெரிவிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!