
கோப்ரா - ரஷ்யா படப்பிடிப்பில் இணைந்த இர்பான் பதான்
கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பாக படக்குழுவினர் ரஷ்யாவில் தான் படப்பிடிப்பில் இருந்தனர். பின்னர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினர். அங்கு எடுக்கப்பட வேண்டிய காட்சிகளுக்காக தற்போது மீண்டும் அங்கு சென்றுள்ளனர். இதுதான் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எனத் தெரிவிக்கிறார்கள். அத்துடன் படப்பிடிப்பை முடித்து இறுதிக் கட்டப் பணிகளை விறுவிறுப்பாக செய்து முடிக்க உள்ளார்களாம்.
விரைவில் படத்தின் இசை வெளியீடு, பட வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!