
ஏலே நாளை டிவியில் ஒளிபரப்பு
இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக இருந்தது. தியேட்டரில் வெளியான இரண்டாவது வாரம் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்து விட்டனர்.
ஒரு மாதத்திற்கு பின்பே ஓடிடியில் வெளியிடுவோம் என்று உத்தரவாக கடிதம் கொடுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கூறினார்கள். இதனை மறுத்த தயாரிப்பாளர்களான புஷ்கர், காயத்ரி ஆகியோர் படத்தை விஜய் டி.வியில் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்தனர்.
அதன்படி நாளை (28ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!