
புதிய அமைப்பு தொடங்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்
மகனின் எதிர்ப்பை தொடர்ந்து கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாபஸ் பெற்றார். என்றாலும் மன்றத்தில் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களை விஜய் களையெடுத்தார். அப்பாவுக்கும், மகனுக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளார். இதற்கு செக்யூர் அவர் சிட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக நான் ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன். அந்த முயற்சியின் முதல்படி தான் இது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய விரிவான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!