
நடிகை நிரஞ்சனியை கரம்பிடித்தார் டைரக்டர் தேசிங்கு பெரியசாமி
ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி, டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இடையே காதல் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தார் நிரஞ்சனி. இந்த போட்டோவை அகத்தியனின் மூத்த மகளும் நடிகையுமான விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த போட்டோக்கள் வைரலானது.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி, நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகை சேர்ந்த பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!