
நடிகர் ஆகிறார் பிரபு சாலமன்
மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் அழகிய கண்ணே. இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர் விஜயகுமார் இயக்குகிறார். பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன், லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . படத்தின் இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும் , கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தில் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார் .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!