
ராஷ்மிகாவின் அடுத்த டார்கெட் பாலிவுட்
தமிழில் கார்த்தி ஜோடியாக "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். அடுத்து அவரை தங்களது படங்களிலும் நாயகியாக நடிக்க வைக்க சில முன்னணி நடிகர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், ராஷ்மிகாவின் டார்க்கெட்டோ பாலிவுட்டை நோக்கி இருக்கிறது.
தற்போது ஹிந்தியில் "மிஷன் மஜ்னு" என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்து அமிதாப்பச்சன் நடிக்கும் "டெட்லி" படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா நடித்த ஹிந்தி ஆல்பமான "டாப் டக்கர்" வீடியோ 5 கோடி பார்வைகளை நெருங்க உள்ளது. இதனால் ராஷ்மிகா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
தெலுங்கைப் போலவே ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என முயற்சித்து வருகிறாராம். இதனால், தற்போது மும்பையில் சொந்தமாக விலை உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளாராம். ஹைதராபாத்திலும் இது போலவே ஒரு பிளாட்டை ஏற்கெனவே வாங்கியுள்ளார் ராஷ்மிகா.
அதனால், இனி தமிழ்ப் படங்களில் நடிக்க ராஷ்மிகா ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!