
அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்
இந்நிலையில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் நிலையில் அவரது பட ரிலீஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் திரையுலகப் பயணத்தில் பெரும் திருப்புமுனையைத் தந்த படங்களில் ஒன்றான பில்லா மீண்டும் ரிலீசாக இருக்கிறது. அடுத்த மாதம் (மார்ச் 12-ந் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளனராம்.
கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினியின் பில்லா பட ரீமேக் தான் இந்தப்படம் என்றாலும், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!