
மீண்டும் ஹீரோவானார் கணேஷ் வெங்கட்ராமன்
தற்போது உன் பார்வையில் என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். இதனை பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் நடிக்கிறார்கள். ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் தொழில் அதிபராகவும் நடிக்கிறார்கள்.
கணேஷ் வெங்கட்ராமன் கூறியதாவது: கபிர் லாலின் ஒளிப்பதிவு மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. என் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!