
விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த இந்திரஜித்
மலையாள திரையுலகில் இந்திரஜித்தும் அவரது சகோதரரான பிரித்விராஜும் தனித்தனி ஹீரோக்களாக தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துள்ளார்கள். பிரித்விராஜை போல தானும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் இந்திரஜித். ஆனால் அவர் நடித்த நரகாசூரன் ரிலீஸ் ஆகமுடியாத சிக்கலில் இருக்கிறது. குயீன் வெப் சீரிஸில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தார். அதுவும் ரசிகர்களிடம் கவனம் பெறாமலேயே போனது. இந்தமுறை விஷ்ணு விஷாலின் படம் இவருக்கு தமிழில் நல்ல துவக்கத்தை கொடுக்கும் என நம்பலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!