
டோலிவுட் ஹீரோக்களை புகழும் ஸ்ருதிஹாசன்
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரவிதேஜா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் ஆகியோரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ரவிதேஜாவிற்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு. அவர் என்னிடத்தில் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். அதேபோல், மகேஷ்பாபு ஒரு அழகான ஹீரோ. அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான நேரங்கள். அல்லு அர்ஜூன் நான் இதுவரை கண்டிராத கடின உழைப்பாளி. நேர்மையானவர். தனது ஒவ்வொரு படங்களுக்கும் தான் செய்ய வேண்டியதை விட அவர் அதிகமான உழைப்பை கொடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!