
பர்ரோஸ் - இயக்கத் தயாராகும் மோகன்லால்
தான் இயக்குனராக அறிமுகமாகும் "பர்ரோஸ் - கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷர்" (Barroz : Guardinan Of D"Gama"s Treasure) படம் தான் தன்னுடைய அடுத்த படம் எனத் தெரிவித்தார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருந்தது. குழந்தைகளைக் கவரும் விதத்தில் 3 டியில் இப்படம் உருவாக உள்ளது.
இப்படத்திற்கு அமெரிக்க ரியலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளார். படம் குறித்து ஒரு வருடத்திற்குப் பிறகு மோகன்லாலை சந்தித்தது பற்றி லிடியன் அவருடைய டுவிட்டர் தளத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள சினிமா உலகில் அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ள படம் இது என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!