
வாத்தி கம்மிங் : அஷ்வின் நடனம், சண்டை போடும் அஜித் ரசிகர்கள்
நேற்று சென்னையில் முடிந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் நடுவே மைதானத்தில் "மாஸ்டர்" படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு லேசாக நடனமாடினார் அஷ்வின். அது மட்டுமல்ல ஒரு பேட்டியில் தினமும் அந்தப் பாடலைக் கேட்டார் ஒரு புத்துணர்வு வந்துவிடும் என்றார்.
கடந்த மாதம் கூட "வாத்தி கம்மிங்" பாடலின் சிறு பகுதியை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து "வேற மாறி" என்று பதிவிட்டிருந்தார்.
இதனால், அஷ்வின் ஒரு விஜய் ரசிகர் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்யையோ, விஜய் படங்களையோ யார் பாராட்டினாலும் அவர்களுடன் சண்டைக்குச் செல்வதையே தங்களுடைய வழக்கமான ஒரு வேலையாக அஜித் ரசிகர்கள் சிலர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!