
விஷாலுக்கு முந்தைய மூன்று தோல்விகளை சரிக்கட்டுமா சக்ரா
அந்தத் தோல்விகளை இந்த வாரம் வெளியாக உள்ள "சக்ரா" சரிக்கட்டுமா என்பதுதான் கோலிவுட்டில் கேள்வியாக உள்ளது. டிரைலரைப் பார்ப்பதற்கு "இரும்புத் திரை" பார்ட் 2 போலவே இருக்கிறது. இந்தப் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டுமென்று விஷாலும் நிறையவே முயற்சிக்கிறார்.
இப்படத்திற்காக தெலுங்கில் கூட பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டார். ஆனால், தமிழில் இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பை வைத்து பின் திடீரென ரத்து செய்துவிட்டார். எந்த சந்திப்பும் நிகழ்த்தாமல் நேரடியாகவே பட வெளியீட்டை சந்திக்க தயாராகிவிட்டார் போலிருக்கிறது.
இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் விஷால் தனக்கிருக்கும் சில பல கோடி கடன்களில் கொஞ்சம் கோடிகளையாவது அடைக்க முடியும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!