
நடிப்பிலும் பிஸியான சுப்பிரமணியம் சிவா
சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் வடசென்னை, மற்றும் அசுரன் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவண சக்தி இயக்கும் மீண்டும் என்ற படத்தில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது தவிர அம்மா உணவகம் என்ற படத்தில் கண்பார்வையற்ற புரட்சி பாடகராக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஸ்வின் கார்த்திக், சசிசரத் இருவரும் நாயகர்களாகவும் ஸ்ரீநிதி, பாத்திமா இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். விவேகபாரதி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!