
இந்தியன் 2 டிராப்பா ? : டுவிட்டரில் நடந்த காரசார விவாதம், உண்மை என்ன?
இதனிடையே, "மாஸ்டர்" படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் அறிவிப்பும் வெளியானது. "இந்தியன் 2" படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
நேற்று முன்தினம் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதனால், "இந்தியன் 2" படம் டிராப் ஆகிவிட்டதா என டுவிட்டர் தளத்தில் ரசிகர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள். "இந்தியன் 2" டிரென்டிங்கில் கூட வந்தது. ஆனால், "இந்தியன் 2" படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்கள் நடந்தால் போதும், மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹசான் சமீபத்தில் தனது காலில் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்து கொண்டார். இன்னும் சில மாதங்கள் அவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்களாம். அதனால் தான் "இந்தியன் 2" படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை என்கிறார்கள். மேலும் "விக்ரம்" படப்பிடிப்பையும் தற்போது ஆரம்பிக்கும் எண்ணத்தில் கமல்ஹாசன் இல்லையாம்.
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுதான் கமல்ஹாசன் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகலாம் என்கிறார்கள். எனவே, "இந்தியன் 2" டிராப் ஆகவில்லை. அப்படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் அடுத்த படத்திற்குப் போவார் என்று சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!