
மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா ஷாலினி?
திருமணத்திற்கு பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலகி இல்லத்தரசியாக இருந்து வரும் ஷாலினி தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. ஏற்கனவே 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தவரான ஷாலினி, 21 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்த செய்தியை இன்னும் சம்பந்தப்பட்ட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!