
காத்துவாக்குல ரெண்டு காதல் - சந்தோஷத்தில் சமந்தா
இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் பணிபுரிவது குறித்து சமந்தா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். அது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது : “வலிமையான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களுடன் இணைந்து நடிப்பது எவ்வளவு சந்தோஷமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. "காத்துவாக்குல ரெண்டு காதல்" படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் என நிச்சயமாகச் சொல்வேன். இந்தப் பார்ட்டியை அசத்திக் கொண்டிருக்கிறீர்கள் விக்னேஷ் சிவன்,” என பாராட்டித் தள்ளுகிறார் சமந்தா.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!