
50 மில்லியன் சாதனையை;க் கடந்த நெருப்புடா
ரஜினிகாந்த் நடித்த படங்களில் "பேட்ட" படத்தில் இடம் பெற்ற "மரண மாஸ்" பாடல் தான் அவர் நடித்த படங்களிலேயே அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள பாடலாக உள்ளது. அப்பாடல் 163 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினிகாந்தின் பிரம்மாண்டப் படமான "2.0" படத்தின் பாடல்கள் கூட பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை. ஆனால், "பேட்ட" படத்தின் "மரண மாஸ்" , "கபாலி" படத்தின் "நெருப்புடா" ஆகிய பாடல்கள்தான் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து "தர்பார்" படத்தின் "சும்மா கிழி" பாடல் 50 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் யு டியூபில் "மாரி" படப் பாடலான "ரௌடி பேபி" பாடல் 107 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!