
குட்டி ஸ்டோரியின் ஸ்டோரிகள் என்னென்ன ?
இப்படத்தில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளதாக ஏற்கெனவே அறிவித்து, டிரைலரையும் வெளியிட்டார்கள். ஆனால், டிரைலரில் கூட யார், யார் எந்தப் படத்தை இயக்கியுள்ளார்கள், யார், யார் நடித்துள்ளார்கள் என்ற தகவலை வெளியிடவில்லை.
அவற்றை நேற்று தான் அறிவித்தார்கள். "குட்டி ஸ்டோரி" படத்தில் உள்ள நான்கு ஸ்டோரிக்களின் தலைப்பும், அதை இயக்கியவர்கள், நடித்துள்ளவர்களின் விவரம்...
எதிர்பாரா முத்தம்
இயக்கம் - கௌதம் மேனன்
இசை - கார்த்திக்
நடிப்பு - கௌதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன், ரோபோ சங்கர்
அவனும் நானும்
இயக்கம் - விஜய்
இசை - மது
நடிப்பு - அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ்
லோகம்
இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - பிரேம்ஜி அமரன்
நடிப்பு - வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால், லுத்புதீன்
ஆடல் பாடல்
இயக்கம் - நலன் குமாரசாமி
இசை - எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு - விஜய் சேதுபதி, அதிதி பாலன்
நான்கு குட்டி ஸ்டோரிகளும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!