
கமலின் விக்ரம் தள்ளிப்போகிறது
பிப் 09, 2021
Advertisement
மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமலை வைத்து "விக்ரம்" படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே டீசரை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் காலில் ஆபரேஷன் செய்து ஓய்வில் உள்ளார். மீண்டும் தேர்தல் தொடர்பான வேலைகளில் இறங்க உள்ளார். இதனால் இப்படம் தள்ளிப்போகும் என தெரிகிறது. இதனால் அந்த இடைப்பட்ட வேளையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலையில் லோகேஷ் இறங்கி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் ஒரு கதை சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டதாகவும், விரைவில் படம் தொடர்பான பணிகள் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!