
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அருவி அதிதிபாலன்
முதல் படத்திலேயே அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால், அவருக்குத் தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மலையாளத்தில் "படவேட்டு, கோட் கேஸ்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஆந்தாலஜி படமான "குட்டி ஸ்டோரி" படத்தில் நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள இப்படத்தில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. படத்தின் ஸ்னீக் பீக் நேற்று வெளியானது. அதை வைத்துப் பார்க்கும் போது அவரது கதாபாத்திரம் விஜய் சேதுபதியின் முன்னாள் காதலி போலத் தெரிகிறது.
இப்படத்திற்குப் பிறகாவது தமிழில் தொடர்ந்து நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!