
மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் ?
அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தை இயக்கி முடித்த பிறகு மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலை விட்டு விலக முடிவெடுத்த பின் தொடர்ந்து படங்களில் நடிக்க ரஜினிகாந்த் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். "அண்ணாத்த" படத்திற்குப் பிறகு அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஏற்கெனவே, கேஎஸ் ரவிக்குமாரிடமும் மீண்டும் "ராணா" படத்தின் கதையைக் கேட்டுள்ளார். அவரும் அக்கதையை மீண்டும் அவருக்கு சொல்லி உள்ளார். நின்று போன "ராணா" படம் கூட மீண்டும் எடுக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
"அண்ணாத்த" படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில்தான் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள படம் எது என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!