
யாருக்கும் ஆதரவு இல்லை: நடிகர் ரஜினி அறிவிப்பு
இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றம், எப்போதும் போல் செயல்படும். மற்ற கட்சிகளுக்கு போக விரும்புவோர், மன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என, ரஜினி அறிவித்தார். இதையடுத்து, ரஜினிக்கு நெருக்கமான அர்ஜுனமூர்த்தி, புதிய கட்சி துவக்கப் போவதாக தெரிவித்தார்.
அர்ஜுனமூர்த்தி கட்சி துவக்கினால், அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை என, மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், மன்ற மாவட்ட செயலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், வரும் சட்டசபை தேர்தலில், ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் லதா ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கப்போவதாக வரும் செய்தியும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!