
வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அவ்வளவு சம்பளமா?
பாலிவுட்டின் இளம் நாயகனான ஷாகித் கபூர் உடன் அந்த சீரிஸில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளாராம். "த பேமிலி மேன்" வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த சீரிஸையும் இயக்க உள்ளார்களாம்.
இதற்காக ஷாகித் கபூர் 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். ஆனால், அவருடைய ஒப்பந்தத்தில் இந்த சீசன் நன்றாகப் போய் அடுத்த சீசன் ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் சம்பளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அதே சமயம் விஜய் சேதுபதிக்கு 55 கோடி சம்பளமாம். ஆனால், அடுத்த சீசனில் கூடுதல் சம்பளம் என அவருடைய ஒப்பந்தத்தில் இல்லையாம்.
தமிழ்ப் படங்களில் நடிக்கக் கூட விஜய் சேதுபதிக்கு அவ்வளவு சம்பளம் கிடையாது. அப்படியிருக்க வெப் சீரிஸில் நடிக்க அவ்வளவு பெரிய தொகையா என ஆச்சரியப்படுகிறதாம் பாலிவுட் வட்டாராம். இருவரது சம்பளமே 100 கோடிக்கு வந்துவிட்டால் மற்ற செலவுகளைச் சேர்த்தால் ஒரு வெப் சீரிஸுக்கே இவ்வளவு செலவா என அதிர்ச்சியடைகிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!