
மாநாட்டில் என்ன சிறப்பு?: சிம்பு, வெங்கட் பிரபு விளக்கம்
படம் குறித்து சிம்பு கூறியிருப்பதாவது: எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மத நம்பிக்கை இல்லை. எல்லா கடவுளையும் ஒன்றாக பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று பண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். இந்தப் படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். என்றார்.
படம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது: மாநாட்டில் புதிதாக சில விஷயங்களை முயன்றுள்ளேன். ரசிகர்கள் அதைப் படம் பார்க்கும்போது உணர்வார்கள். இதுதான் கதை என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் காட்சிகளாகப் பார்க்கும்போது உடனே புரிந்துவிடக் கூடிய கதையாக இது இருக்கும்.
ஒரு மாநாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்தில் காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். வேறமாதிரி ஒரு அரசியலைக் காட்டியிருக்கிறேன். படத்தின் களமே மாநாடுதான். ஒரு மாநாடு நடந்தால் அந்த ஊர் எப்படியிருக்கும், அதற்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படம் என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!