
எதிர்பார்ப்பை ஏற்றியுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் உப்பெனா
விஜய் சேதுபதி அடுத்து நடித்துள்ள தெலுங்குப் படமான "உப்பெனா" அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இன்று மாலை இப்படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் பாடலான "நீ கண்ணு நீலி சமுத்திரம்" பாடல் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது- அது முதலே படத்தைப் பற்றிய பேச்சுக்களும் அதிகமானது. டீசர் வெளிவந்த பிறகு அந்த எதிர்பார்ப்பு கூடியது.
தற்போது படத்தின் வியாபாரத்தில் ஏரியாக்களை நல்ல விலை கொடுத்து வாங்க பலர் முன் வந்துள்ளனராம். புச்சி பாபு சனா இயக்கத்தில் சிரஞ்சீவியின் உறவினரான பாஞ்சா வைஷ்ணவ் தேஜ் இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சுகுமார் எழுதியிருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக அமைந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!