
சிம்புவுக்கு ஹன்சிகா பிறந்தநாள் வாழ்த்து ; ரசிகர்கள் ரியாக்சன்
இருந்தாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் அவருக்கு உதவிசெய்யும் விதமாக சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்து வருகிறார். இந்தநிலையில் ஹன்சிகா சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருப்பது, மீண்டும் இருவருக்கிடையே காதல் துளிர் விடுகிறதோ என சிம்பு ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஹன்சிகாவின் வாழ்த்து குறித்து கருத்து கூறியுள்ள ரசிகர்கள் பலரும், சிம்பு இப்போது தான் தனது திரையுலக பயணத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருப்பதாகவும், மீண்டும் அவரை காதல் என்கிற பெயரில் பழைய நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என்பது போன்றே விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இன்னும் சில ரசிகர்களோ, பேசாமல் ஹன்ஷிகா சிம்புவை திருமணம் செய்து கொள்வது தான் சிறந்தது” என்றும் கூறி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!