
ஓடிடி விவகாரம், விரைவில் தயாரிப்பாளர்களுடன் பேச்சு : திருப்பூர் சுப்பிரமணியம் அறிக்கை
தியேட்டருக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடிகிறது. என்றாலும் தொடர்ந்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
மாஸ்டர் படத்தின் லைசென்ஸ் பிப்ரவரி 4ம் தேதி ( நாளை) இரவு வரை தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆகையால் 4ம் தேதி இரவு வரை அனைத்துத் திரையரங்குகளுக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படும். வெள்ளிக்கிழமை முதல் யாரெல்லாம் படத்தைத் தொடர வேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்கள் எல்லாம் அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் பேசி புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
கபடதாரி திரைப்படம் 30 நாள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார். சிறிய பட்ஜெட் படங்கள் 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜெட் படங்கள் 50 நாட்களுக்கு பிறகும் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் விரைவில் பேச்சுவாத்தை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!