
10 ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் செய்த அஜித்: நண்பர் வெளியிட்ட தகவல்
அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்ட தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டு எழுதியிருப்பதாவது:
சென்னை, கோவை, சென்னை, ஐதராபாத், வாரனாசி, காங்டாக், லக்னோ, அயோத்யா, ஐதராபாத், சென்னை என 10,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார் அஜித். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித்தான். அவர் சுத்தமான தங்கம். இந்த புகைப்படம் அஜித்தின் சம்மதத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரே மூச்சில் அவர் 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை முடித்துவிட்டார் என்பதை உங்களிடம் சொல்வதற்காக.
இவ்வாறு தினேஷ்குமார் எழுதியிருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!