
20 விருதுகளை வென்ற வாய்தா விரைவில் ரிலீஸ்
"ஜோக்கர்", "கே.டி. என்கிற கருப்பத்துரை" படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், "நக்கலைட்ஸ்" புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இன்று, விஜய் சேதுபதி வெளியிட்டார். போஸ்டரில் கழுதையுடன் மு.ராமசாமி கோர்ட் கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை என்ற வாசகமும் கவனம் ஈர்த்துள்ளது. மோஷன் போஸ்டரின் இறுதியில் சட்டம் குறித்து நாசர் பேசும் வசனம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற "வாய்தா" திரைப்படம், இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!