
400 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய ஆர்யா
அவ்வப்போது நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்வார். சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை சைக்கிள் பயணம் செய்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை தனது நண்பர்களுடன் இணைந்து வெற்றிகரமாக முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்யாவின் சைக்கிள் பயண சாதனையை நடிகர் விவேக்கும் பாராட்டி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் "உங்களின் 400 கி.மீ. சைக்கிள் பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கிறீர்கள்"" என்று பாராட்டி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!