
போனிகபூர் வெளியிடும் டீசர் : அஜித் ரசிகர்கள் கோபம்
ஆனபோதும் இதுவரை வலிமை படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து டைரக்டர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர். ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்கள். அதனால் தான் சமீபத்தில் கூட, கடவுள் முருகனின் பேனரை ஏந்தி, நீயாவது வலிமை படம் குறித்த அப்டேட் சொல்லு முருகா என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள், அந்த அளவுக்கு விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள் ரசிகர்கள்.
இப்படியான நிலையில், ஜனவரி 26ம் தேதி பவுடர் என்ற படத்தின் டீசரை போனி கபூர் வெளியிடுவதாக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்த்து அஜித் ரசிகர்கள் இன்னும் டென்சன் ஆகி விட்டார்கள். பல மாதங்களாக வலிமை அப்டேட் கேட்டு வருகிறோம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத போனிகபூர், இன்னொரு படத்தின் டீசரை வெளியிடுவதா? என்றும் போனிகபூரை நோக்கி காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!