
ஆர்ஆர்ஆர் அக்., 13ல் ரிலீஸ்
இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர். அது படத்தின் வெளியீட்டு தேதியாக கூட இருக்கலாம் என நாம் சொல்லியிருந்தோம். ஆம் இப்போது அது உறுதியாகி உள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு அக்., 13ல் படம் வெளிவருவதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர இன்னும் சில மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த ""அக்., 13ல் நீரும், நெருப்பும் ஒன்றிணைந்து இதுவரை பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை, இந்திய சினிமாவின் மிகப்பெரிய, மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்க உள்ளது. சவாரி ஆரம்பம்"" என படக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஜுனியர் என்டிஆர் புல்லட்டிலும், ராம் சரண் குதிரையிலும் ஆக்ரோஷமாக சவாரி செய்கின்றனர். பின்னணியில் ஆர்ஆர்ஆர் என தலைப்பு இடம் பெற்றுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!