
காஜலுக்கு நம்பிக்கை கொடுத்த மொசகலு
இருப்பினும் தான் நடித்து வரும் இந்தியன்-2, ஆச்சார்யா ஆகிய படங்கள் திரைக்கு வரும்போது நானும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகையாகி விடுவேன் என்று நம்பும் காஜல், தான் நடித்து வந்த மொசகலு என்ற தெலுங்கு படம் திரைக்கு வர தயாராகி விட்டதால் கூடுதல் உற்சாகமடைந்திருக்கிறார்.
ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜெப்ரிசின் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, ருஹானி சர்மா, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வாலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதோடு மார்ச் 11-ல் இப்படம் திரைக்கு வருகிறது. ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மொசகலு, தனது சினிமா பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் காஜல்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!