
மாஸ்டர் கொடுத்த தைரியம் : அடுத்தடுத்து புதிய வெளியீடுகள்
விஜய் நடித்த "மாஸ்டர்" படம் வெளிவந்தால் தான் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதன்படியே நடந்தும் விட்டது. உலக அளவில் "மாஸ்டர்" படம் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.
இதனிடையே, "மாஸ்டர்" படம் கொடுத்த தைரியத்தால் அடுத்தடுத்து சில படங்களை தியேட்டர்களில் வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த வாரம் “களத்தில் சந்திப்போம், கபடதாரி” ஆகிய சிறிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.
பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற தனுஷ் நடித்துள்ள "ஜகமே தந்திரம்" படம் மீது தான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயாராக உள்ள வேறு சில படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சில ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சில தயாரிப்பாளர்களை அணுகி பேரம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!