
தெலுங்கில் மாஸ்டர் வெற்றி : நன்றி தெரிவித்த விஜய்
தெலுங்கில் சுமார் 9 கோடிக்கு விற்கப்பட்ட படம் 22 கோடி வரை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். இதர செலவுகள் போக படத்தின் நிகர வசூல் 13 கோடி. இதன் காரணமாக இதுவரையிலும் சுமார் 4 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரடித் தெலுங்குப் படங்களுக்குப் போட்டியாக இந்த அளவிற்கு "மாஸ்டர்" தெலுங்கில் வசூலித்தது பெரிய விஷயம் என்கிறார்கள்.
இப்படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட மகேஷ் கொனேரு இன்று விஜய்யை சந்தித்து தெலுங்கு வசூல் நிலவரம் குறித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பு பற்றி மகேஷ் டுவிட்டரில், “எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக விஜய்யை சந்தித்து "மாஸ்டர்" படத்தின் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்தேன். தெலுங்கு மாநிலங்களில் திரைப்பட ரசிகர்கள் அன்பு செலுத்தியதற்கு விஜய் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் இனி விஜய்யின் படங்கள் மற்ற தமிழ் நடிகர்களை விடவும் பெரிய வியாபாரத்தை நோக்கிப் பயணிக்க "மாஸ்டர்" வெற்றி உதவியுள்ளதாக கோலிவுட் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!