
உன்னி கிருஷ்ணன் தாத்தா மறைவு: கமல் இரங்கல்
அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்க வைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளைய வந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்க வேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமலுக்கு தாத்தாவாக உன்னி கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!