
கிண்டல் செய்த ரசிகருக்கு சாந்தனு கொடுத்த பதில்
இந்நிலையில், மாஸ்டர் படத்தைப்பற்றி அப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனனை விட, சிறிய வேடங்களில் நடித்த சாந்தனு, விஜய் டிவி தீனா, 96 படத்தின் நடித்த கெளரி ஆகியோர் தான் மீடியாக்களில் பெரிய அளவில் படத்தைப்பற்றி பேசி வந்தனர்.
ரசிகர் ஒருவர், ""மாஸ்டர் படத்தில் பூனை அளவுக்குகூட உங்களுக்கு காட்சி இல்லை. ஊறுகாய் மாதிரி கூட நீங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிறகு எதற்கு இத்தனை பில்டப் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டு சாந்தனுவை கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு சாந்தனு, ""கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் ஒரு காட்சியோ, ஒரு படமோ அதுவே ஒரு சாதனை தான்"" என்று பதில் கொடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!