
வேதாளம் தெலுங்கு ரீமேக் : தள்ளி வைத்த சிரஞ்சீவி
சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரிடம் கூட பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொன்னார்கள். இதனிடையே, தற்போது நடித்து வரும் "ஆச்சார்யா" படத்திற்குப் பிறகு "லூசிபர்" படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கத் தயாராகிவிட்டார் சிரஞ்சீவி. இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.
"வேதாளம்" ரீமேக்கை தள்ளி வைத்துவிட்டார் எனச் சொல்கிறார்கள். இப்படத்திற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டி உள்ளதால், கொரோனா தொற்று மிகவும் குறைந்த பிறகு இப்படத்தில் நடிக்கலாம் என அவர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த "கத்தி" படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம்தான் சிரஞ்சீவி ரீ-என்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!