
சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்
அடுத்து சிரஞ்சீவி நடிக்க உள்ள "லூசிபர்" தெலுங்கு ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தமிழில் சில வெற்றிப் படங்களைக் கொடுத்த மோகன்ராஜாதான் அப்படத்தின் இயக்குனர். மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இசையமைக்கும் வாய்ப்பை யார் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸுக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. முதல் முறையாக சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள தமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
“எந்த ஒரு இசையமைப்பாளருக்கு பெரும் கனவான ஒரு விஷயம். நமது பாஸ் சிரஞ்சீவி சார் மீது நான் எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளேன் என்பதைக் காட்டக் கூடிய சந்தர்ப்பம். சிரஞ்சீவி சார், சகோதரர் மோகன் ராஜா ஆகியோருடன் எங்களது இசைப்பயணத்தை ஆரம்பித்துவிட்டோம்,” என மகிழ்வுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாய்ப்பைப் சரியாகப் பயன்படுத்தி காப்பி அடிக்காமல் இசையமையுங்கள் என குறும்புக்கார சிரஞ்சீவி ரசிகர்கள் அதில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!