
பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு
தயாரிப்பாளர் கூறுகையில், பத்து தல படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது எங்களுக்கு பெருமை.சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஓபிலி என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். ப்ரியா பவானிசங்கர், டீஜே, மனுஷ்யப்புத்திரன், கலையரசன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர், என்றார்.
விண்ணைத்தாண்டி வருவாயே, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின் மூன்றாவது முறையாக சிம்புவின் படத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான். அதேப்போன்று சில்லுன்னு ஒரு காதல் படத்திற்கு பின் கிருஷ்ணாவின் படத்திற்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!