
வார இறுதி - உலக வசூலில் முதலிடத்தில் மாஸ்டர்
50 சதவீத இருக்கைகளில் இப்படம் வசூலித்த தொகை யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். அது உலக அளவிலும் எதிதொலித்துள்ளது. ஜனவரி 15 முதல் 17 முடிய கடந்த வார இறுதி நாட்களில் "மாஸ்டர்" உலக அளவில் 23 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரு மடங்கு வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் "எ லிட்டில் ரெட் பிளவர்" படம் 11.75 மில்லியன் யுஎஸ் டாலரை மட்டுமே வசூலித்துள்ளது.
தியேட்டர்கள் திறக்கப்பட்ட பல வெளிநாடுகளிலும் "மாஸ்டர்" படத்தைப் பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு விமர்சனங்களுக்கிடையில் இப்படம் தென்னிந்திய அளவிலும், உலக அளவிலும் லாபத்தைப் பெற்றுவிடும் என்கிறார்கள். ஹிந்தியில் மட்டுமே இப்படம் கடந்த வாரத்தில் வெறும் 2 கோடியை மட்டுமே வசூலித்து தோல்வியைக் கண்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!