
விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ
இந்த நிலையில், அடுத்தபடியாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் விஜய். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதாவது, அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அதே அருண்விஜய்யே விஜய்-65ஆவது படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும். அதோடு, மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!